"மிஷன் இம்பாசிபிள் 7" திரைப்படத்திற்கான டாம் குரூஸின் சண்டைக் காட்சி இணையத்தில் வைரல்

0 2935
"மிஷன் இம்பாசிபிள் 7" திரைப்படத்திற்கான டாம் குரூஸின் சண்டைக் காட்சி இணையத்தில் வைரல்

மிஷன்: இம்பாசிபிள் 7 திரைப்படத்திற்காக டாம் குரூஸ், ஓடும் ரயிலில் சண்டையிடும் காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது.

ஹாலிவுட் படங்களில் துணிச்சலான டேர்டெவில் சண்டைக் காட்சிகளால் தனி ரசிகர் பட்டாளங்களை கொண்டவர் டாம் குரூஸ்.

இவரின் அடுத்த திரைப்படமான மிஷன் இம்பாசிபிள் 7 திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நார்வேயில் நடைபெற்ற நிலையில், ஓடும் ரயிலின் மேற்புறம் எடுக்கப்பட்ட சண்டை காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

ரெபேக்கா பெர்குசன், விங் ரேம்ஸ், சைமன் பெக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படம், அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments